பிரதமர் ஹரிணி பதவி விலகுவது குறித்து அரசாங்க தரப்பில் வெளியான தகவல்
பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச கல்வி அமைச்சு மற்றும் பரீட்சை திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கு எவ்வித இடையூறுகளையும் ஏற்படுத்தாமல் தனது சத்தியாக்கிரக போராட்டத்தை தொடரலாம். அமைச்சரவையிலும் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்பட மாட்டாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

பிரதமர் பதவி
அவர் மேலும் குறிப்பிடுகையில், எதிர்க்கட்சிகள் இது தொடர்பில் அடிப்படையற்ற கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றன. அரசாங்கம் அவை தொடர்பில் கவனத்தில் கொண்டு எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை. ஆனால் பெற்றோர் உள்ளிட்ட தரப்பினரின் கவலைகள் தொடர்பில் நிச்சயம் கரிசனை கொண்டுள்ளோம்.
எந்தவொரு காரணத்துக்காகவும் ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சர் பதவியிலிருந்தோ பிரதமர் பதவியிலிருந்தோ விலகப் போவதில்லை. எனவே அவர் தனது சத்தியாக்கிரத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டியேற்படும்.
தனித்திருந்த வெளிநாட்டு தொழிலதிபரின் மனைவிக்கு நடந்தேறிய துயரம் ; இலங்கையின் பிரபல விடுதியில் சம்பவம்
கல்வி அமைச்சு மற்றும் பரீட்சை திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கு எவ்வித இடையூறுகளையும் ஏற்படுத்தாமல் , பிரதமர் ஹரிணி அமரசூரியவை பதவியிலிருந்து நீக்கும் வரை விமல் வீரவன்ச தனது சத்தியாக்கிர போராட்டத்தை தொடர்வதில் எவ்வித சிக்கலும் இல்லை.
அமைச்சரவையிலும் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்பட மாட்டாது. அதற்கான அவசியமும் தற்போது இல்லை என்றார்.