இஷாரா செவ்வந்தி யாழ்ப்பாணத்திலும் பதுங்கியிருந்தார்; விசாரணையில் தகவல்!
கணேமுல்ல சஞ்சீவ படுகொலையில் தலைமறைவான காலட்டத்தில் சம்பவத்தின் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி யாழ்ப்பாணத்திலும் பதுங்கியிருந்தார் என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
நேபாளத்தில் கைது செய்யப்பட்டு நேற்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்த இஷாரா செவ்வந்தியிடமும், அவருடன் கைது செய்யப்பட்ட குழுவிடமும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இஷாரா தப்பியோட உதவிய யாழ் நபர்
இதன்போதே, இலங்கையில் நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கு பிறகு செவ்வந்தி 4 நாள்கள் இலங்கையில் தலைமறைவாகி இருந்தார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மித்தெனிய மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலேயே அவர் தலைமறைவாகி இருந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. அதன் பின்னர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்று அங்கு மூன்று வாரங்கள் தங்கியிருந்த பின்னரே அவர் நேபாளம் சென்றுள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜே.கே.பாய் என்பவரே செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார் எனத் தெரியவருகின்றது. செல்வந்தியுடன் கைதான அவர் பாதாள உலகக் குழுவின் தலைவர் கெஹேல்பத்தர பத்மேயின் சகா எனவும் தெரியவருகின்றது.
சம்பவத்தை அடுத்து செவ்வந்தியுடன் இணைந்து அவரும் வெளிநாட்டுக்குத் தப்பியோடிய நிலையில் அவர் ஊடாகவே செவ்வந்திக்குரிய பணம் வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகின்றது.