பதவி விலகுகிறாரா மஹிந்த? பிரதமரின் ஒருங்கிணைப்பாளர் வெளியிட்ட பரபரப்பு டுவிட்!
இலங்கையில் தற்போதைய அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த ஒரு மாதமாக பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதேவேளை பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நாளைமறுதினம் (04-05-2022) புதன்கிழமை கூடவுள்ள நாடாளுமன்றில் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் குற்றப்பிரேரணை என்பன சமர்ப்பிக்கப்படும் என ஐக்கியமக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இவ்வாறான குழப்ப நிலைகளுக்கு மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) எடுக்கும் எந்த தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பிரதமர் தனது பதவியிலிருந்து விரைவில் விலகவுள்ளார் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இது தொடர்பில் பிரதமரின் இணைப்புச் செயலாளர் கீதாநாத் காசிலிங்கம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
பிரதமர் என்று சமீப நாட்களாக செய்திகள் பரவி வருகின்றன பிரதமர் பதவியை இராஜினாமா செய்கிறார்.
அடுத்ததாக நாடாளுமன்றம் கூடும் போது விசேட அறிக்கையொன்றை விடுத்து அவர் பதவி விலகுவார் என்பது லேட்டஸ்ட். இது பொய். இதுபோன்ற வதந்திகளை பரப்புபவர்கள், முதலில் செய்தியை சரிபார்க்கவும் என குறிப்பிட்டுள்ளார்.