பிக் பாஸ் அபிஷேக் இப்படிப்பட்ட ஆளா? நெட்டிசன்கள் கமெண்ட்
ரசிலர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது.
இம்முறை நிகழ்ச்சியில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில், பல பிரபலங்களை ஜாலியாக நேர்க்காணல் செய்த அபிஷேக் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கதறியழுதது அவரது இன்னொரு பக்கத்தை காட்டியிருக்கிறது. இதன்போது அபிஷேக் ஒவ்வொருவரை பற்றியும் பேசினார்.
அப்போது “மிகப்பெரிய தயாரிப்பாளரின் வாரிசாக - மிகப்பெரிய பணக்காரராக இருந்தும் அனைவரிடமும் எளிமையாகவும் எதார்த்தமாகவும் பழகக் கூடியவர்” என வருணை புகழ்ந்தவர், “ஒரு விஷயம் கிடைக்கவில்லை என்றால் அதற்காக வருத்தப் படவோ ஏமாற்றமடையவோ செய்யமாட்டார் என்பது போல் தெரிகிறார்” என சிபியை பற்றிக் குறிப்பிட்டார்.
அதோடு, “ராஜ பரம்பரையில் பதவிக்கு ஆசைப்படாத ஒரு பையன்தான் அபினய். சாவித்திரியின் பேரனாக இருந்தாலும் கூட சொந்தமாக சொந்தக்காலில் முன்னுக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்” என அபினயை புகழ்ந்தார்.
அப்போது திடீரென வெடித்து அழுத அபிஷேக், “தனது அம்மாவிடம் பலமுறை தான் கோபப்பட்டதாகவும், தன்னுடைய விவாகரத்துக்குப் பிறகு அவருடைய அம்மா வலியை அதிகம் அனுபவிப்பதாகவும்” அபிஷேக் குறிப்பிட்டார்.
இந்நிலையில் அபிஷேக் அழுததைப்பார்த்த ரசிகர்கள் அபிஷேக் இவ்வளவு சென்சிட்டிவான ஆளா என சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.