ஈரான் கப்பல் விவகாரம் ; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மீது ராஜதந்திர அழுத்தமா?
இலங்கை கடற்பரப்பில் தாக்குதலுக்குள்ளானதாகக் கூறப்படும் ஈரானிய கப்பல் சம்பவம் தொடர்பாக, இந்தியா முன்கூட்டியே தகவல் அறிந்திருந்ததாகவும், அதனைத் தொடர்ந்து இலங்கை அரசை ஒரு ராஜதந்திரச் சூழ்நிலைக்குள் தள்ளும் முயற்சி இடம்பெற்றிருக்கலாம் என்ற விவாதம் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் சில அரசியல் விமர்சகர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
அதன்படி, சம்பவம் குறித்து இந்தியா முன்கூட்டியே அறிந்திருந்தால், அது இலங்கை அரசை குறிப்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான நிர்வாகத்தை ஒரு கடினமான ராஜதந்திர நிலைக்கு உள்ளாக்கும் முயற்சியாக இருக்கக்கூடும் என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதேவேளை, இந்த குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய அரசாங்கம் அல்லது இலங்கை அரசாங்கம் சார்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியிடப்படவில்லை.
இந்த விடயம் தொடர்பிலான மேலதிய தகவல்களை இந்த காணொளி மூலம் காணலாம்......