ஈரானின் அதியுயர் பாதுகாப்பு அதிகாரி உயிரிழப்பு; இஸ்ரேல் அறிவிப்பை பொய்யாக்கிய குறிப்பு
ஈரானின் அதியுயர் பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி (Ali Larijani) கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் உரிமை கோரியுள்ள போதிலும், ஈரான் தரப்பிலிருந்து இதுவரை உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், அலி லாரிஜானியின் உத்தியோகபூர்வ எக்ஸ் (X) கணக்கில் கையால் எழுதப்பட்ட குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஈரானிய அரச ஊடகங்களாலும் பகிரப்பட்டுள்ள இந்தக் குறிப்பானது,

அலி லாரிஜானியின் கையால் எழுதப்பட்ட குறிப்பு
அண்மையில் அமெரிக்கத் தாக்குதலில் உயிரிழந்த ஈரானிய கடற்படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமைந்துள்ளது.
உயிரிழந்த வீரர்களின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறவிருந்த நிலையில், அவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்தக் குறிப்பு வெளியாகியுள்ளது.
அதிரடியான பதிலடி; இப்படி திருப்பி அடிப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை; ஈரான் இராணுவத்தை மெச்சும் டிரம்ப் !
அதியுயர் பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி (Ali Larijani) , 2005 மற்றும் 2007 காலப்பகுதியில் அவர் ஈரானின் பிரதான அணுசக்தி பேச்சுவார்த்தையாளராக சர்வதேச மட்டத்தில் செயற்பட்டுள்ளார்.
இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ், அலி லாரிஜானி மற்றும் பாசிஜ் படைத் தளபதி சுலைமானி ஆகியோர் கொல்லப்பட்டதாகத் தொலைக்காட்சியில் அறிவித்த சில நிமிடங்களிலேயே இந்தக் குறிப்பு வெளியாகியுள்ளது.
லாரிஜானி உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்த ஈரான் இதனை வெளியிட்டதா? அல்லது ஏற்கனவே எழுதி வைக்கப்பட்ட குறிப்பை அவரது அலுவலகம் வெளியிட்டுள்ளதா?என்பது குறித்த விவாதங்கள் தற்போது எழுந்துள்ளன.