ஈரானின் உச்சத்தலைவர் தொடர்பில் வெளியான பகீர் தகவல்
ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, கடுமையான காயங்களுக்கு உள்ளாகி இருப்பதாகவும் போரில் சேதமடைந்த முகத்திற்கு சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருப்பதாகவும் அமெரிக்க பத்திரிகையான வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்க- இஸ்ரேல் கூட்டு வான் படைகள் பயங்கர தாக்குதல் நடத்தின. இதில், அப்போது ஈரான் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

இரகசிய தகவல்கள்
இதையடுத்து, அந்நாட்டின் உச்ச தலைவராக அவரது மகன் மொஜ்தபா கமேனி தேர்வு செய்யப்பட்டார். அவரும், பெப்ரவரி 28ல் நடந்த தாக்குதலில் படுகாயம் அடைந்ததாக கூறப்பட்டது.
இருப்பினும், மொஜ்தபா குறித்த தகவல்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அவரின் தற்போதைய நிலை மற்றும் ஆட்சியில் மொஜ்தபாவின் பங்கு குறித்து அமெரிக்க பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், மொஜ்தபா காயமடைந்ததை தொடர்ந்து, ஈரானின் நிர்வாக அதிகாரம் ராணுவ ஜெனரல்கள் அடங்கிய குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரின் செயல்பாடு போலவே இந்த குழுவின் பணிகள் இருக்கிறது. போர் உள்ளிட்ட அனைத்து முக்கிய முடிவுகளையும் இந்த குழுவே எடுக்கிறது.காயம் காரணமாக மொஜ்தபா காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இனி, அவர் செயற்கை கால் உதவியுடன்தான் நடக்க முடியும். முகம் மற்றும் உதடுகள் கடுமையாக காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாகவே, வீடியோ வடிவில் செய்திகளை வெளியிடாமல், எழுத்துப்பூர்வமான அறிக்கைகளை மட்டும் அவர் வெளியிட்டு வருகிறார் என்றும் குறித்த பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.