பதிலடி நிச்சயம் மிக கடுமையாக இருக்கும் ; இஸ்ரேலுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை
இஸ்ரேல் அரசாங்கம் மற்றொரு தவறை செய்யும் என்றால், ஈரானின் பதிலடி நிச்சயம் மிக கடுமையாக இருக்கும் என்று ஈரான் அரசாங்கம் எச்சரித்துள்ளது.
தெஹ்ரான், சிரியாவில் ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஏவுகணைகள், ஆளில்லா விமானங்களை கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தியது.
ஈரானின் பதிலடி நிச்சயம் மிக கடுமையாக இருக்கும்
இதனால், மத்திய கிழக்கு பகுதியில் போர் ஏற்படுவதற்கான பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், ஐ.நா. அமைப்பின் பொது செயலாளர் அன்டானியோ கட்டிரெஸ், இதுபோன்று படைகளை குவிப்பதற்கு எதிராக, சர்வதேச சமூகத்திற்கு எச்சரிக்கை விட்டுள்ளது.
அந்த அளவுக்கு பணமோ, நேரமோ நமக்கு இல்லை என்ற வகையில் கூறிய அவர், இன்னும் அதிகளவிலான போர் ஏற்பட்டால், அதனால் விளைவுகள் மோசம் அடையும் என்றும் கூறியுள்ளார்.
ஈரான் தாக்குதல் நடத்தியதும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, தன்னுடைய மந்திரிசபையுடன் போர் பற்றி கடந்த ஞாயிற்று கிழமை ஆலோசனை நடத்தினார். இஸ்ரேலில் இருந்து வெளிவரும் பத்திரிகையில், ஈரானில் பதற்ற நிலை காணப்படுகிறது. அது அரசாட்சியை பலவீனப்படுத்தி உள்ளது. அதனால், பதிலடி கொடுக்க இஸ்ரேல் தலைவர்கள் அவசரப்பட வேண்டியதில்லை என தெரிவித்து உள்ளது.
இந்த தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மற்றும் பிற இடங்களில் விமான நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. எனினும், இந்த மோதலால், பங்கு சந்தைகள் நேற்று சரிவை சந்தித்திருந்தது.
இந்த சூழலில், இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தும் முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து கொள்ள வேண்டும் என்று ஈரான் எச்சரித்து உள்ளது.
இஸ்ரேல் அரசு மற்றொரு தவறை செய்யும் என்றால், ஈரானின் பதிலடி நிச்சயம் மிக கடுமையாக இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.