புலஸ்தினி உட்பட 05 பேரை விசாரிக்க அறிவுறுத்தல்
ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் 17 வது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 05 பேர் மீது விசாரணைகளை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அபு ஹிந்த், அஹமட் தாலிப் லுக்மான் தாலிப், அபு அப்துல்லா, ரிம்ஜான் மற்றும் புலஸ்தினி மகேந்திரன் என்று அழைக்கப்படும் சாரா ஜஸ்மின் ஆகியோர் தொடர்பாகவே விசாரணையை முன்னெடுக்க அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 2019 ஏப்ரல் தாக்குதல்களுக்கு பொறுப்பான அனைவரையும் சட்டத்தின் முன் கொண்டுவருவதில் உறுதியாக இருப்பதாகக் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா குறிப்பிட்டார்.
இதேவேளை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட சாட்சிய பதிவுகளை ஆய்வு செய்ய 12 பேர் கொண்ட குழுவையும் சட்டமா அதிபர் நியமித்துள்ளார்.
மேலும் தாக்குதல் தொடர்பாக எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அனைத்து பதிவுகளும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.