ஓகஸ்ட் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலை குறித்து வெளியான முக்கிய தகவல்
ஓகஸ்ட் மாதத்திற்கான லாஃப்ஸ் (Laugfs) வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள விலையிலேயே லாஃப்ஸ் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பிற பொருளாதார காரணிகளை கருத்தில் கொண்டு மாதந்தோறும் எரிவாயு விலைகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

எனினும், ஓகஸ்ட் மாதத்திற்கு விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இதேவேளை, லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனமும் ஓகஸ்ட் மாதத்திற்கான சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என ஏற்கனவே அறிவித்துள்ளது.
இதனால், நாட்டின் பிரதான சமையல் எரிவாயு விநியோக நிறுவனங்களான லாஃப்ஸ் மற்றும் லிட்ரோ ஆகிய இரு நிறுவனங்களும் ஓகஸ்ட் மாதத்தில் தற்போதைய விலையையே தொடர்ந்தும் பேணவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளன.