அரசியல் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட தகவல்!

M A Sumanthiran Sri Lanka Politician Sri Lankan Peoples
By Sundaresan Sep 19, 2022 12:21 AM GMT
Sundaresan

Sundaresan

Report

அரசியல் தீர்வு என்பது ஒரு சமஸ்டி கட்டமைப்பிலான ஒரு அதிகார பகிர்வு அர்தமுள்ளதாக இருக்க வேண்டும்: இதுவே இந்தியாவின் நிலைப்பாடும் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வு என்பது ஒரு சமஸ்டி கட்டமைப்பிலான ஒரு அதிகார பகிர்வு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். அத்தகைய அதிகார பகிர்வையே ஏற்றுக் கொள்வோம். இந்தியாவும் அந்த நிலைப்பாட்டிலேயே உள்ளது என தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இன்று (18.09) இடம்பெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் காலையில் இருந்து மாலை வரை வவுனியா அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் எமது மக்களை பாதிக்கும் பல விடயங்கள் தீர்க்கமாக கலந்து ஆலோசிக்கப்பட்டன. விசேடமாக நிலங்கள் அபகரிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மகாவலி, தொல்லியல் திணைக்களம், வனவிலங்கு பாதுகாப்பு, வனப்பாதுகாப்பு என்று வெவ்வேறு சட்டங்களின் அடிப்படையிலும், வேறு விதமாகவும் நிலங்களுக்கு ஏற்பட இருக்கின்ற ஆபத்துக்களை ஆராய்ந்தோம். திருகோணமலையில் தற்போது ஏற்பட்டுள்ள சவால் குறித்து பேசினோம்.

குறிப்பாக திருக்கோணச்சரத்திற்கு சொந்தமான மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து ஆராயப்பட்டது. இது தொடர்பாக கட்சியினால் சில குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்த விடயங்களை உடனடியாக ஆராய்ந்து அடுத்த மத்திய செயற்குழு கூட்டங்களுக்கு முன்னதாக அனைவருக்கும் அனுப்பி வைக்குமாறு அவர்கள் பணிக்கப்பட்டுள்ளார்கள்.

அதேவேளையில், திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்களது வாழ்விடங்களுக்கு ஏற்பட்டுள்ள மிக மோசமான பாதிப்புக்கள் குறித்து திருகோணமலையில் இருந்து கட்சி மாவட்ட மட்ட உறுப்பினர்கள் தமது கருத்துக்கள் கூட்ட ஆரம்பத்தில் பகிர்ந்து சென்று இருக்கிறார்கள்.

இந்த விடயங்கள் சம்மந்தமாக கட்சி தலைவர், சிரேஸ்ட உபதலைவர், கட்சி செயலாளர் ஆகியோருடன் நானும் சென்று எங்களுடைய பெரும் தலைவர், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இரா.சம்மந்தனை சந்தித்து இவற்றை கையாள்வது குறித்த உபாயங்கள் தொடர்பாகவும் பேசுவதாக முடிவு எடுத்துள்ளோம்.

அரசியல் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட தகவல்! | Information Released By Sumanthran About Politics

அத்துடன், கட்சி மாநாட்டுக்கு முன்பாக எமது கட்சி கிளைகள் புனரமைத்தலில் உள்ள முன்னேற்றங்கள் குறித்து மாவட்டம் மாவட்டமாக ஆராய்ந்தோம். கொரோனா தொற்று அதன்பின் எரிபொருள் பிரச்சனை காரணமாக நலிவடைந்து இருந்த இந்த செயற்பாடுகள் தற்போது ஓரளவுக்கு முன்னேற்றமடைந்துள்ளது. ஓக்டோபர் மாத இறுதிக்கு முன்னதாக அனைத்து மாவட்ட கிளைகளையும் புனரமைத்து அதனைத் தொடர்ந்து கட்சி மாநாட்டை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிரான கையெழுத்து போராட்டம் இடையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஒரு சில மாதங்கள் தடைப்பட்டுருந்ததன. அது மீளவும் முடிக்கி விடப்பட்டுள்ளது. ஒரு ஊர்தியுடன் சென்று பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக நடமாடும் செயற்பாடுகளை தற்போது முன்னெடுத்துள்ளோம்.

இலங்கையின் அனைத்து மாவட்டங்களுக்கும் இது கொண்டு செல்லப்படவுள்ளது. வடக்கு, கிழக்கில் இலங்கை தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னனியினர் முன்னின்று செய்கிறார்கள். வடக்கு செயற்பாடு நிறைவடைந்துள்ளது. அடுத்து அனுராதபுரம் நோக்கி நகரவுள்ளோம். தொடர்ச்சியாக அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று இறுதியாக அம்பாந்தோட்டை செல்லவுள்ளோம். இதற்கு ஆதரவாக பல்வேறு கட்சிகள், அமைப்புக்கள் ஆதரவை வழங்கியுள்ளன.

எதிர்கட்சி வரிசையில் இருக்கின்ற கட்சிகள், 2000 தொழிற்சங்களை கொண்ட ஒன்றியமும், மக்கள் அமைப்புக்களும் என பலர் ஆதரவு வழங்கியுள்ளார்கள். தென்னிலங்கை மாவட்டங்களுக்கு நாம் செல்லும் போது அந்த அமைப்புக்கள் முன்னின்று செய்வார்கள். அந்த சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பது அவர்களதும் கோரிக்கை. அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

இந்த போராட்டத்தின் பலனாக இவை இரண்டையும் அடைவோம் என்ற நம்பிக்கை இருகிறது. ஐ.நாவில் இந்தியாவின் கூற்றிலே இலஙகையில் தமிழ் மக்கள்ளுக்கான அரசியல் தீர்வு ஒன்றை கொடுப்பதில் இலங்கை அரசாங்கம் கால இழுத்தடிப்பு ஒன்றை செய்து வருகின்றது என்று சொல்லியிருக்கிறார்கள். 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் படுத்துவது உள்ளடங்களாக அதிகார பகிர்வு முறை செய்யப்பட வேண்டும் என்று தான் சொல்லியிருக்கிறார்கள்.

ஆகவே 13 ஆம் திருத்தச் சட்டத்துடன் இந்த விடயம் நிறைவுக்கு வருகிறது என அவர்கள் சொல்லவில்லை. ஆகவே அந்த நிலைப்பாடு நல்ல நிலைப்பாடு. முதல் படியாக 13வது திருத்தத்தை அமுல்படுவத்துவதாக இருந்தாலும் அதனை செய்யட்டும். ஆனால் அது தீர்வல்ல. அரசியல் தீர்வு என்பது ஒரு சமஸ்டி கட்டமைப்பிலான ஒரு அதிகார பகிர்வு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். அத்தகைய அதிகார பகிர்வையே ஏற்றுக் கொள்வோம்.

இந்தியாவும் அந்த நிலைப்பாட்டிலேயே உள்ளது. ஐ.நாவில் நிறைவேற்றப்பட போகும் தீர்மானங்கள் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை நான் பேசியுள்ளேன். அதில் என்ன மாற்றம் தேவை என தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அதனை நிறைவேற்றப் போகிறவர்கள் இணை அணுசரணை நாடுகள். அவர்கள தான் இறுதியில் அதில் வேறு எதனையும் சேர்த்துக் கொள்ளலாமா, இதைப் பலப்படுத்தலாமா, அப்படி செய்தால் வாக்குகள் கூடுமா, குறையுமா என்கின்ற கடைசி தீர்மானங்களை எடுப்பார்கள்.

ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ள வரைவு ஓரளவு எல்லா விடயங்களையும் அணுகுகின்ற ஒரு வரைபாக உள்ளது. அது இன்னும் பலமூட்டப்பட வேண்டும் என கோரியுள்ளோம். எல்லோருடைய கருத்துகளையும் உள்வாங்கியுள்ளார்கள். ஏனைய நாடுகளுடன் பேசி முடிவு எடுப்பார்கள் கூட்டத்தின் இறுதி நாட்களில் வாக்கெடுப்பு நடைபெறும் எனத் தெரிவித்தார்.

மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நட்டாங்கண்டல்

03 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

Chavakacheri, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Kempen, Germany

22 Sep, 2025
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
மரண அறிவித்தல்

சுருவில், London, United Kingdom

26 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

24 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
22ம் ஆண்டு நினைவஞ்சலி

கும்புறுபிட்டி, உவர்மலை

29 Sep, 2003
மரண அறிவித்தல்

கொக்குவில், பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Scarborough, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Siegen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Zürich, Switzerland

20 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், பிரித்தானியா, United Kingdom

27 Sep, 2010
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Gunzenhausen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Neuilly-Plaisance, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US