உயிரிழந்த களுத்துறை பாடசாலை மாணவி தொடர்பில் பகீர் தகவல்
ஹோட்டலில் மர்மமான முறையில் உயிரிழந்த களுத்துறை பாடசாலை மாணவியின் சடலம் சட்ட வைத்தியரிடம் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி சிறுமியின் உடல் உறுப்புகள் அரசாங்க பரிசோதகர்க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை
இந்நிலையில் உயிரிழந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த சிறுமி மற்றுமொரு பெண் மற்றும் இரண்டு ஆண்களுடன் களுத்துறை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு வந்து இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் (மே 6) ரயில் பாதையை அண்டிய ஐந்து மாடிகளைக் கொண்ட தற்காலிக தங்குமிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்த பாடசாலை மாணவியின் நிர்வாண சடலம் கண்டு பிடிக்கப்பட்டிருந்தமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருந்தது.
தொடர்புடைய செய்திகள்