முதலமைச்சர் விஜய் பல்வேறு அரசியல் தலைவர்களுடன் சந்திப்பு
தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றதையடுத்து, பல்வேறு அரசியல் தலைவர்களை முதலமைச்சர் விஜய் சந்தித்து வருவது தமிழக அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்த முதலமைச்சர் விஜய், அவருக்குப் பொன்னாடை அணிவித்து மலர்க்கொத்து வழங்கி மரியாதை செலுத்தினார். இதன்போது வைகோ, முதலமைச்சர் விஜய்க்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்
அதேவேளை, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ், தனது இல்லத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்யை வாசலுக்கு நேரில் சென்று வரவேற்றார்.
பின்னர், தனது குடும்பத்தினரையும் முதலமைச்சர் விஜய்க்கு அறிமுகப்படுத்தி வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானையும் அவரது இல்லத்தில் முதலமைச்சர் விஜய் சந்தித்தார். விஜய்யை கண்டவுடன் சீமான் அவரை கட்டியணைத்து வரவேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.