நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் மத்திய வங்கி வழங்கியுள்ள தகவல்
இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவிலான வெளிநாட்டு பணப்பரிமாற்றங்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டில் இந்த காலப்பகுதியில் பெறப்பட்ட வெளிநாட்டு பணப்பரிமாற்றங்களின் அளவு 555.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 140.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகமாக வெளிநாட்டு பணப்பரிமாற்றங்கள் பெறப்பட்டுள்ளன.
இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் இதுவரை வெளிநாட்டு பணப்பரிமாற்றங்கள் மூலம் இலங்கைக்கு பெறப்பட்ட வருமானம் 5,811.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.