பஹ்ரைனில் வசிக்கும் இலங்கையருக்கு வெளியான முக்கிய தகவல்
பஹ்ரைன் இராச்சியத்தில் வசித்து வரும் அனைத்து இலங்கை குடிமக்களும் எச்சரிக்கையுடன் இருந்து, அந்நாட்டு அதிகாரிகள் வெளியிடும் அறிவிப்புகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கவனமாக பின்பற்றுமாறு பஹ்ரைனிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தங்களது தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிசெய்யவும், தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்பவும் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

அவசர நிலை
அவசர நிலை ஏற்பட்டால், கீழ்க்கண்ட தொடர்பு எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியின் மூலம் தூதரகத்தை அணுக முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது:
கைபேசி & WhatsApp: 33530290 Attaché (+973) 3597 0290 / (+973) 3510 6301 தொழிலாளர் அதிகாரி (+973) 3371 2875
மின்னஞ்சல்: [slemb.bahrain@mfa.gov.(mailto:slemb.bahrain@mfa.gov.lk)
அனைத்து இலங்கை குடிமக்களும் அமைதியாக இருந்து, அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றி, தங்களது பாதுகாப்பை முதன்மையாகக் கருதுமாறு இலங்கைத் தூதரகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.