அரையிறுதியில் அதிரடியான வெற்றி ; அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய வீராங்கனைகள்
மகளிர் உலகக் கிண்ண தொடரில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியா அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றுப்பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.
மும்பையில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி 49.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 338 ஓட்டங்களை பெற்றது.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 48.3 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் Jemimah Rodrigues ஆட்டழிக்காமல் 127 ஓட்டங்களை பெற்று வெற்றிக்கு வித்திட்டார்.
அதேநேரம் நேற்று இடம்பெற்ற மற்றொரு அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மகளிர் அணி இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
அதன்படி, மகளிர் உலகக் கிண்ண தொடரில் 52 ஆண்டுகால வரலாற்றில் (1973 முதல்) முதல் முறையாக, இங்கிலாந்து அல்லது அவுஸ்திரேலிய மகளிர் அணிகள் இல்லாமல் ஒரு இறுதிப் போட்டி நடைபெறவுள்ளமை விசேட அம்சமாகும். இந்தியா இதற்கு முன்பு 2005 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இருப்பினும், தென்னாப்பிரிக்கா இந்த வாய்ப்பை வென்றது இதுவே முதல் முறைாகும்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        