இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய போர்க்கப்பல்
இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் நிரிஷெக் போர்க்கப்பல், இன்று (21) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் இந்தக் கப்பலை வரவேற்றனர்.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள இந்த கப்பலின் கட்டளை அதிகாரியாக கெமாண்டர் சைலேஸ் குமார் தியாகி கடமையாற்றுகின்றார்.

போர்க்கப்பல் நாட்டின் தங்கியிருக்கு காலப்பகுதியில் போது, அதன் குழுவினர் இலங்கை கடற்படையுடன் இணைந்து திட்டத்தை நடத்துவார்கள்.
இது இரு நாடுகளின் சுழியோடி துறைகளுக்கு இடையே அனுபவப் பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாட்டிற்கான ஒரு வாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே நல்லெண்ணத்தையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார்கள். அத்துடன், கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களுக்கும் அவர்கள் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.