21 நாட்கள் தொடர்ந்து 1 நெல்லிக்காய் சாப்பிட்டால் உடலில் இத்தனை நன்மைகளா?
தற்போதைய பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தால் தினந்தோறும் ஏதாவது ஒரு ஆரோக்கிய பிரச்சனையை சந்திக்க வேண்டியுள்ளது.தொடர்ந்து 21 நாட்கள் தினமும் 1 நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால், உடலில் பல அதிசயங்கள் நடக்கும் என உங்களுக்கு தெரியுமா? இந்த நெல்லிக்காயை வெறுமனே சாப்பிடாமல், கருப்பு உப்புடன் சேர்த்து எடுக்கும் போது, உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. தினமும் 1 நெல்லிக்காய் எவ்வாறான நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது என நாம் இங்கு பார்ப்போம்.

அசிடிட்டி, அல்சர், மலச்சிக்கல்
அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் தினமும் 2 நெல்லிக்காய் பழத்தை சாப்பிட்டு வந்தால், இந்த பிரச்சனை தானாக குறையும். அதுவும் தொடர்ந்து 2 நாட்கள் உட்கொண்டு வந்தாலே நல்ல பலன் கிடைக்கும். மேலும் வாய்வு தொல்லை, மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களும் தினமும் இந்த பழத்தை உட்கொண்டு வந்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும். அல்சர் பிரச்சனை உள்ளவர்களும் இந்த பழத்தை உட்கொண்டு வந்தால், அல்சர் குறையும்.

தலைமுடி பிரச்சனை
தலைமுடி அதிகம் உதிர்தல், முடி அடர்த்தியின்மை போன்ற பிரச்சனைகளைக் கொண்டவர்கள், தினமும் இந்த பழத்தை ஒன்று உட்கொண்ட வந்தால், தலைமுடி தொடர்பான பிரச்சனைகள் குறையும்

சரும பிரச்சனை
பளபளப்பான சருமத்தைப் பெற, பருக்கள் குறைய, கரும்புள்ளிகள் நீங்க இந்த நெல்லிக்காய் பெரிதும் உதவி புரியும். அதுமட்டுமின்றி, வயதான பின் முகத்தில் தோன்றும் முதுமை தோற்றத்தை தாமதப்படுத்தவுமம், சரும வறட்சியை போக்கவும் உதவுகிறது. முக்கியமாக இந்த நெல்லிக்காயானது உள்ளிருந்து சருமத்திற்கு ஈரப்பதமூட்டும்

நோயெதிர்ப்பு சக்தி
அடிக்கடி சளி, ஜலதோஷம் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள், தினமும் ஒரு பழத்தை உட்கொண்டு வந்தால், இவற்றை உண்டாக்கும் வைரஸ்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம். ஒருவேளை வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து விரைவில் அதிலிருந்து மீண்டு வரவும் உதவி புரியும்

சர்க்கரை நோய்
சர்க்கரை நோய் உள்ளவர்களும் இதை தினமும் தவறாமல் ஒன்று உட்கொண்டு வருவது நல்லது. இதனால் சர்க்கரை நோயாளிகள் சந்திக்கும் கண் பார்வை பிரச்சனைகள், நரம்பு பிரச்சனைகள் போன்றவை தடுக்கப்படுவதோடு, இரத்த சர்க்கரையும் கட்டுப்படும்
