இலங்கையருக்கு கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு

Sri Lanka Kerala India
By Vironika Nov 25, 2026 07:49 PM GMT
Report

தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்குவதற்கு நிதியளித்தமை மற்றும் அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தமை தொடர்பான சர்வதேச சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட இலங்கைப் பிரஜையான முஹம்மது அஸ்மினுக்கு, இந்தியாவின் கேரள உயர் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தேசிய புலனாய்வு முகவரகத்தின் விசேட நீதிமன்றம் அஸ்மினுக்கு பொதுமன்னிப்பு வழங்கியதோடு, அரசுத் தரப்புக்கு உதவும் சாட்சியாக மாற அவர் சம்மதித்துள்ள நிலையில், அவரைத் தொடர்ந்தும் தடுத்து வைத்திருக்க முடியாது என  நீதியரசர் குழு தீர்ப்பளித்துள்ளது.

இலங்கையருக்கு கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு | Indian Court Issues Order To Sri Lankan

 சரீரப் பிணை

மேலும், தனிப்பட்ட ஆபத்துகளுக்கு மத்தியில் சாட்சியமளிக்க முன்வருபவர்களைப் பாதுகாப்பது அவசியம் எனக் குறிப்பிட்ட நீதிமன்றம், கேரள சாட்சிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அஸ்மினுக்கு உடனடியாக உரிய பாதுகாப்பு வழங்குமாறு கேரள உள்துறை திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

தலா 100,000 இந்திய ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளுடன் பிணைப் பத்திரத்தில் கையொப்பமிட வேண்டும்.

கடவுச்சீட்டை ஒப்படைப்பதுடன், வதிவிட முகவரி மற்றும் தற்போதைய கைபேசி இலக்கத்தை இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவரகத்துக்கு வழங்க வேண்டும்.

காதலால் மகள் கர்ப்பம் ; ஈரானில் பெற்றோர் செய்த வெறிச்செயல் ; அடுத்தடுத்து அரங்கேறும் சம்பவம்

காதலால் மகள் கர்ப்பம் ; ஈரானில் பெற்றோர் செய்த வெறிச்செயல் ; அடுத்தடுத்து அரங்கேறும் சம்பவம்

விசேட நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி எர்ணாகுளம் மாவட்டத்தை விட்டு வெளியேறக் கூடாது என்பதுடன், ஒவ்வொரு சனிக்கிழமையும் விசாரணை அதிகாரியின் முன்னிலையில் ஆஜராக வேண்டும்.

வழக்கின் ஏனைய சந்தேகநபர்களைத் தொடர்பு கொள்ளவோ, சாட்சிகளுக்கு இடையூறு விளைவிக்கவோ, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

யாழில் பௌர்ணமி தினத்தில் வீட்டிற்குள் அரங்கேறிய சம்பவம் ; காட்டிக்கொடுத்த இரகசிய தகவல்

யாழில் பௌர்ணமி தினத்தில் வீட்டிற்குள் அரங்கேறிய சம்பவம் ; காட்டிக்கொடுத்த இரகசிய தகவல்

இந்தப் பிணை உத்தரவானது அவர் இந்தியாவில் தங்குவதற்கான உரிமையை வழங்காது எனவும், அவரது குடிவரவு நிலை தொடர்பான சட்ட நடவடிக்கைகளைத் தடுக்காது எனவும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

பாகிஸ்தான், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இயங்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் புலிகள் அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர்களுடன் இணைந்து, போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத ஆயுதக் கொள்வனவு, ஹவாலா பணப் பரிமாற்றம் மற்றும் கிரிப்டோகரன்சி ஊடாகப் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியளித்ததாக இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவரகம் அஸ்மின் மீது குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரித் நிகழ்வில் பட்டாசு கொளுத்திய மாணவனுக்கு இறுதியில் காத்திருந்த சோகம்

பிரித் நிகழ்வில் பட்டாசு கொளுத்திய மாணவனுக்கு இறுதியில் காத்திருந்த சோகம்

மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US