நாட்டில் சீரற்ற வானிலை ; 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, 6 மாவட்டங்களைச் சேர்ந்த பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) மண்சரிவு முன்னெச்சரிக்கை மத்திய நிலையம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, இன்று (25) பிற்பகல் 4.00 மணி முதல் நாளை (26) பிற்பகல் 4.00 மணி வரை அமுலில் இருக்கும்.

எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள்:
நிலை 02
கண்டி மாவட்டம்: உடுநுவர
கேகாலை மாவட்டம்: கேகாலை, ரம்புக்கனை, யட்டியாந்தோட்டை, மாவனல்லை, புலத்கொஹுபிட்டிய மற்றும் கலிகமுவ.
நிலை 01 - Yellow Alert
நுவரெலியா மாவட்டம்: நில்ந்தண்டாஹின்ன, கொத்மலை மேற்கு, அம்பகமுவ கோரளை, கொத்மலை கிழக்கு, தலவாக்கலை, நோர்வூட் மற்றும் வலப்பனை.
கண்டி மாவட்டம்: தொலுவ, கங்க இஹல கோரளை, உடபளாத மற்றும் யட்டிநுவர
கேகாலை மாவட்டம்: அரநாயக்க, ருவான்வெல்ல மற்றும் தெஹியோவிட்ட
களுத்துறை மாவட்டம்: புளத்சிங்கள மற்றும் பாலிந்தநுவர
இரத்தினபுரி மாவட்டம்: கிரியெல்ல மற்றும் குருவிட்ட
மாத்தளை மாவட்டம்: ரத்தோட்டை.
மேற்குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள மலைச்சரிவுகளை அண்டி வசிக்கும் மக்கள், மண்சரிவு, கற்பாறைகள் உருண்டு விழுதல் மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுதல் போன்ற அபாயங்கள் குறித்து மிகுந்த விழிப்புடன் செயற்படுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.