இங்கிலாந்து - இந்தியா போட்டியின் இடையே ரசிகரின் காமெடி கலாட்டா
இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது போட்டியில் ரசிகர் ஒருவர் இந்தியா உடை அணிந்து மைதானத்துக்குள் சென்று காமெடி கலாட்டா நடத்தியுள்ளார். லீட்ஸில்
நடைபெற்று வரும் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது, இங்கிலாந்து ரசிகர் ஜார்வோ மீண்டும் இந்திய அணியின் பேட்ஸ்மேன் போல உடையணிந்து மைதானத்திற்குள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மூன்றாவது நாள் ஆட்டத்தின் போது ரோகித் சர்மா அவுட்டானதும், மைதானத்தில் இருந்து இந்திய பேட்ஸ்மேன் போல முழு உடை அணிந்து ஜார்வோ மைதானத்திற்குள் நுழைந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவரை வெளியேற்ற முயன்ற நிலையில் அவர் வெளியேற மறுத்து அடம்பிடித்தார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டார்.
ஜார்வோ லாட்ஸில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போதும் இந்தியாவின் சீருடையில், சக ஃபீல்டர் போல மைதானத்திற்குள் நுழைந்தது குறிப்பிடதக்கது.