இலங்கைக்கு மருத்துவ உதவிகளை நன்கொடையாக வழங்கியது இந்தியா
இலங்கையின் பொதுச் சுகாதாரத் துறைக்கு ஆதரவளிக்கும் நோக்கில், சுமார் 3 தொன் எடையுள்ள காசநோய் (Anti-TB) நிவாரண மருந்துகளை இந்தியா நன்கொடையாக வழங்கியுள்ளது.
இந்திய வானூர்திப் படையின் C-130J ரக வானூர்தி மூலம் இந்த மருத்துவப் பொருட்கள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொதுச் சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதற்கும், ஆதரவளிப்பதற்கும் இந்தியா தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் "அண்டை நாட்டுக்கு முதலிடம்" (Neighbourhood First) கொள்கையின் கீழ் இலங்கைக்கான இந்த மருத்துவ உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அவசர மருத்துவத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்திய வானூர்திப் படையின் சிறப்புப் போர் வானூர்தி (C-130J) மூலம் இந்த மருந்துகள் கொழும்பை வந்தடைந்துள்ளன.