இந்தியா 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ; பல மாநிலங்களில் மிகப்பெரிய அரசியல் அதிர்வு
2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இந்தியாவின் பல மாநிலங்களில் மிகப்பெரிய அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக, மேற்கு வங்கத்தில் பல தசாப்தங்களாக நீடித்த திரிணாமுல் காங்கிரஸின் ஆதிக்கத்தை சரித்து, பாரதிய ஜனதா கட்சி முதல்முறையாக ஆட்சியில் அமருகிறது. தற்போதைய நிலவரப்படி, பாஜக 177 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் முன்னிலையில் உள்ளது.

மேற்குவங்கம், கேரளாவில் ஆட்சி மாற்றம்
மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 113 இடங்களுக்கு தள்ளப்பட்டுள்ளது. மறுபுறம், கேரளாவில் இடதுசாரிகளின் தொடர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 87 இடங்களுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.
ஆளும் இடதுசாரி முன்னணி வெறும் 40 இடங்களைப் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தைப் பொறுத்தவரை, பாஜக கூட்டணி 98 இடங்களை வென்று தனது ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
காங்கிரஸ் வெறும் 26 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், முதலமைச்சர் என். ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.