தமிழர் பகுதியில் வேனுக்குள் அரங்கேறிய சம்பவம் ; காட்டிக்கொடுத்த இரகசிய தகவல்
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், வேனில் வைத்து ஐஸ் போதைப்பொருளை எடுத்துச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் ஒருவர், ஒரு தொகை ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே, சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் ஒருவரை வேனுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஒரு தொகை ஐஸ் போதைப்பொருளும், போதைப்பொருள் விற்பனை அல்லது கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை பணத்தொகையும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.