வவுனியாவில் மயானத்தை துப்பரவு செய்ய சென்ற ஊரவர்களுக்கு காத்திருந்த ஷாக்
வவுனியா, கந்தபுரம் பகுதியில் உள்ள சுடலையில் கிராம மக்கள் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது, ரி-56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 06 மகசின்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கந்தபுரம் மயானப் பகுதியில் அப்பகுதி கிராம மக்கள் இணைந்து துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணை
இது குறித்து உடனடியாக வவுனியா பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வவுனியா பொலிஸார், அங்கு கண்டெடுக்கப்பட்ட 06, ரி-56 ரக துப்பாக்கிக்க மகசின்களையும் பாதுகாப்பாக மீட்டுச் சென்றனர்.
குறித்த மகசின்கள் யாரால், எப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டன என்பது குறித்தும், அப்பகுதியில் வேறு ஏதேனும் பொருட்கள் உள்ளனவா என்பது குறித்தும் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.