திருட சென்ற இடத்தில் கடுப்பான திருடன் ; வீட்டு சுவரில் காத்திருந்த ட்விஸ்ட்
திருட சென்ற வீட்டில் நகை, பணம் இல்லாததால் பொருட்களை உடைத்து அட்டகாசம் செய்த ஆசாமி சுவரில் 'சாரி' என எழுதி வைத்துவிட்டு தப்பிச்சென்றார்.
கோவையில் உள்ள ஒரு வீட்டில் புகுந்த மர்ம ஆசாமி, அங்கு திருடுவதற்கு நகை, பணம் இல்லாத விரக்தியில் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்திவிட்டு, சுவரில் 'சாரி' என்று எழுதி வைத்துவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. சில பொருட்கள் உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன.
உடனடியாக படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது, அங்குள்ள பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் அனைத்தும் கீழே கொட்டப்பட்டு இருந்தன.
மேலும், கட்டிலில் இருந்த மெத்தை, சோபா, வாஷிங் மிஷின் மற்றும் பிரிட்ஜ் ஆகியவையும் சேதப்படுத்தப்பட்டு இருந்தது.
வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமி பக்கவாட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டது உள்ளார்.
ஆனால் நகை, பணம் எதுவும் இல்லாத ஆத்திரத்தில், அந்த நபர் பொருட்களை சேதப்படுத்திவிட்டு, சுவரில் ஆங்கிலத்தில் 'சாரி' என்று எழுதி வைத்துவிட்டு தப்பி சென்றுள்ளார்.