தொழிலுக்கு சென்ற இளம் பெண்ணின் உயிரை பறித்த சம்பவம் ; பொலிஸாரின் பிடியில் ஒருவர்
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று சனிக்கிழமை (19) இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
தொழில் நிமித்தம் நானுஓயாவிலிருந்து தலவாக்கலை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே இவ் விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனை
லிந்துலை பகுதியைச் சேர்ந்தவரும், நானுஓயாவில் வசித்து வந்தவருமான 34 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.
கட்டுநாயக்கவிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு நுவரெலியா நோக்கிப் பயணித்த வேன் ஒன்று, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ் விபத்து நேர்ந்துள்ளது.
விபத்து தொடர்பில் 42 வயதான வேன் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.