உடன்பிறந்த அண்ணனுக்கு தம்பி நிகழ்த்திய கொடூரம் ; பறிபோன உயிர்
அங்குருவாதொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெதிகமுவ கந்த பகுதியில் இன்று சனிக்கிழமை (19) நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைவாக அங்குருவாதொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணை
ஹல்தோட்டை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், உயிரிழந்த நபரின் சகோதரரே இக் தாக்குதலை மேற்கொண்டு கொலை செய்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 35 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இச் சம்பவம் தொடர்பில் அங்குருவாதொட பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.