அடுத்த சில நாட்களுக்கு அதிகரிக்கும் மழையுடனான வானிலை
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழைவீழ்ச்சி இன்று (19) முதல் அடுத்த சில நாட்களுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், சபரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாணம் மற்றும் முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.