நாடு முழுவதும் ஆபத்தான 712 இடங்கள் அடயாளம்
நாடு முழுவதும் விபத்துகள் அதிகம் நடக்கக்கூடிய மற்றும் ஆபத்தான 712 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சட்டத்தரணியும் பொலிஸ் மா அதிபருமான பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபரின் கூற்றுப்படி, வீதி விபத்துகள் அடிக்கடி நிகழும் இடங்களைக் கண்டறிவதற்காக நாடு தழுவிய அளவில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

712 இடங்கள்
நாடு முழுவதும் விபத்து ஏற்படக்கூடிய 712 இடங்கள் கண்டறியப்பட்டு, அது தொடர்பான தரவுகள் தொகுக்கப்பட்டு உரிய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இது தொடர்பில் பிரியந்த வீரசூரிய மேலும் தெரிவிக்கையில், மேலும், 2026 ஆம் ஆண்டில் இதுவரை 1,849 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும், இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் எட்டு விபத்துகள் அதிகம்.
கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 16 ஆக அதிகரித்துள்ளன.
மேலும் , வீதி விபத்துகளால் பாதசாரிகளும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுமே மிகவும் கடுமையாகப் பாதிக்கப்படும் குழுக்களாகத் தொடர்கின்றனர்.
பாதசாரி உயிரிழப்புகளில் பெரும்பாலானவை, வீதியோரமாக நடந்து செல்பவர்கள் அல்லது நின்று கொண்டிருப்பவர்களுக்கே நேரிடுகின்றன.
மோட்டார் சைக்கிள் தொடர்பான உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், இத்தகைய விபத்துகள் பிற வாகனங்களுடன் மோதுவதை விட, வீதியோர நிலையான தடைகள் அல்லது பிற பொருட்கள் மீது மோதும்போதே அடிக்கடி நிகழ்கின்றன என்று வலியுறுத்தினார்.