யாழில் புலம்பெயர் மக்களின் காணிகளை அபகரித்து விற்பனை ; வட்டமிடும் கும்பல்; அவதானம் மக்களே!
யாழ் நகரை அண்டிய பகுதிகளில் பூட்டிய நிலையில் இருக்கும் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான காணிகளை அடாத்தாக அபகரித்து விற்பனை செய்யும் கும்பல் ஒன்று நடமாடி வருவதாக கூறப்படுகின்றது.
குறித்த நபர்களால் வெளிநாடுகளிலும் உள்ளூரிலும் வேறு இடங்களிலும் இருக்கும் உரிமையாளர்கள் பெரும் அச்சத்தில் உள்லதாக கூறப்படுகின்றது.

தாம் கொள்வனவு செய்துள்ளதாக அயலவர்களிடம் நாடகம்
அண்மைய நாள்களாக ஒரு ஹயஸ் ரக வாகனத்தில் சுமார் ஐந்தாறு பேர் கொண்ட குழு ஒன்றே இந்த மோசடியை செய்து வருவதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் கூறுகின்றனர்.
குறிப்பாக யாழ் நகர், கே.கே.எஸ் வீதி, A9 வீதி, மானிப்பாய் வீதி, பலாலி வீதி போன்ற இடங்களில் உரிமங்கள் இருந்தும் வெளிநாடுகளிலும் வெளி ஊர்களில் இருக்கும் மக்களின் காணிகளை இலக்கு வைத்து குறித்த கும்பல் செயபடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பூட்டிய நிலையில் இருக்கும் காணிகளின் பூட்டை உடைத்து அவற்றை சிரமதானம் செய்து வருவதுடன் அயலவர்கள் கேட்டால் தாங்கள் கொள்வனவு செய்துவிட்டதாகவும் கூறுகின்றனராம்.

இவ்வாறான நிலையில் சில தினங்களுக்கு முன்னர் குறித்த குழு யாழ் நகரில் உள்ள பல கோடி பெறுமதியான காணி ஒன்றை ஆட்டையை போட முற்பட்ட வேளை உரிமையாளர்களிடம் இவ்விடையம் குறித்து அயலவர்கள் விசாரித்த போது உசாரான காணியின் உரிமையாகர்கள் அவ்விடத்துக்கு சென்றுள்ளனர்.
குறித்த காணியின் உரிமையாளர் பிரபல்யமான நபர் என்பதை அவதானித்த குழு அவ்விடத்தை விட்டு பேச்சு மூச்சின்றி நழுவிச் சென்றுள்ளது.
இதேபோன்று யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று, பல காணிகள் அபகரிக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதை அறியமுடிகின்றது.
எனவே புலம்பெயர் தமிழர்கள் தமது காணிகளை அவ்வப்போது உறவினர்களையோ அல்லது நண்பர்களையோ அனுப்பி நோட்டம் விட்டு உங்கள் காணைகளை பத்திரப்படுத்தி கொள்ளுமாறு சமூக ஆவர்லர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை கள்ள உறுதி முடித்த சட்டத்தரணிகளும் அண்மையில் சட்டத்திடம் மாட்டியமையும் குறிப்பிடத்தக்கது.