திடீரென ஜனாதிபதியின் முன் வந்து கதறிய போதை ஆசாமி! திகைத்து நின்ற பாதுகாபு அதிகாரிகள்
போதைப்பொருள் அச்சுறுத்தலை தோற்கடிப்பதற்கான "'முழு நாடுமே ஒன்றாக'" தேசிய பிரச்சார திட்டத்தை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று (30) இடம்பெற்றது.
இதன்போது போதை ஆசாமி ஒருவர் திடீரென கூட்டத்தில் ஓடிவந்து தம்மை காப்பாற்றுமாறு ஜனாதிபதியிடம் கதறி அழுதார்.

போதையில் இருந்து காப்பாற்றுமாறு கண்ணீர்
இந்நிலையில் குறித்த நபரின் வரவவால் நிகழ்வில் சலசப்பு ஏற்பட்டதுடன், திடீரென நுழந்த நபரால் பாதுகாப்பு அதிகாரிகளும் திகைப்பில் ஆழ்ந்தனர்.
எனினும் போதையில் இருந்து காப்பாற்றுமாறு குறித்த நபர் கண்ணீர் விட்டு கதறியமை அங்கிருந்தவர்களை வேதனை கொள்ள செய்தது.
அதேவேளை போதைப்பொருள் வியாபாரிகள் அனைவரும் உடனடியாக சரணடைய வேண்டும் என நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கடும் எச்சரிக்கை விடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.