மலையகத்தில் வெறிச்சோடிய எரிபொருள் நிலையங்கள்
வளைகுடா யுத்தம் காரணமாக இலங்கையில் பெற்றோல் மற்றும் டீசல், மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் என நினைத்து நாட்டு மக்கள் பெற்றோல் நிலையங்களில் இரவு, பகலாக வரிசையில் நின்று தனது வாகனங்களிலும் ஏனைய கலன்கள், போத்தல்கள் கொள்கலன்களிலும் பெற்றோல் நிரப்பிச் செல்வதை காணக்கூடியதாக இருந்தது.
சுமார் ஒரு கிலோமீட்டர் வரையான தூரத்தில் இவ்வாறு வாகனங்களில் வரிசைகள் காத்து நின்று எண்ணெய் வகைகளை நிரப்பி வந்தனர்.

இந்த நிலையில நாட்டில் எண்ணெய் வகைகளுக்கு பெற்றோல், டீசல், மண்ணெண்ணெயை போன்றவற்றுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை நாட்டில் போதியளவு கையிருப்பில் உள்ளதாக அரசாங்கம் தெரிவித்ததையடுத்து மக்கள் கலைந்து சென்று இன்று பெற்றோல் நிலையங்கள் யாவும் வெறிச்சோடி கிடப்பதை காணக்கூடியதாக உள்ளது.