சஜித்தின் முக்கிய வேண்டுகோள்!

Sajith Premadasa Sri Lanka Economic Crisis Sri Lanka Food Crisis
By Sundaresan Aug 06, 2022 06:03 PM GMT
Report

நாட்டைக் கட்டியெழுப்புவதே அனைவரினதும் பொதுவான இலக்காகும் எனவும், அதற்காக தமது தனிப்பட்ட இலாப எதிர்பார்ப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றிணைய வேண்டும் எனவும், இது வெறும் பதவிப் பரிமாற்றமாக இருக்காது, குழு அமைப்பு மூலம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் முனைப்பாக பங்களிப்பை வழங்கக்ககூடிய ஒன்றாக இருக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இதற்கமைய இது சர்வ கட்சிகளின் கூட்டு வேலைத்திட்டம் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதற்கு அனைத்துத் தரப்பினரின் பங்களிப்பையும் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார் .

குறிப்பாக 19 ஆவது திருத்தத்தை நல்லாட்சி அரசாங்கம் கொண்டு வந்ததாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அதனை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் எனவும், தற்சமயம் துறைசார் மேற்பார்வைக் குழு அமைப்புக்கு அப்பாற்பட்ட, புதிய சக்தி வாய்ந்த குழு முறையின் ஊடாக பாராளுமன்றத்தை முனைப்புடனான பொது கூட்டு வேலைத்திட்டத்தின் ஊடாக வழிநடத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சஜித்தின் முக்கிய வேண்டுகோள்! | Important Request Made By Sajith

இதற்கு அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைப்பது மிகவும் அவசியமானது எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்த பாரதூரமான சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தற்போது அமுலில் உள்ள அவசரகாலச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டில் சாதாரண சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதற்கமைய தற்போது நடைபெற்று வரும் அடக்குமுறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், சட்டத்தை மீறி வன்முறையை பரப்பிய நபர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் தொழிற்சங்கங்கள் சிவில் பொது சமூகத் தலைவர்களை ஒடுக்கி வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இது குறித்து கௌரவ ஜனாதிபதி கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இத்தருணத்தில்,எமது நாடு வீழ்ந்துள்ள வீழ்ச்சியிலிருந்து மீட்பதற்கு மிகவும் சாதகமான தலையீட்டை மேற்கொள்வதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் தன்னால் முடிந்த பங்களிப்பை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

இதன்போது குறிப்பாக எதிர்க்கட்சியின் மூச்சு மற்றும் பிரபஞ்சம் வேலைத்திட்டங்களை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர், நாடளாவிய ரீதியில் அவற்றை இன்னும் முனைப்புடன் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US