இலங்கைக்கு பொதி அனுப்புபவர்களுக்கு முக்கிய தகவல்!
வெளிநாட்டு தபால்களுக்கான சேவைக் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, ஒகஸ்ட் 1 முதல் அதிகரிக்க தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தபால் திணைக்களத்தின் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன கூறுகையில், வெளிநாட்டு தபால் களுக்கான சேவைக் கட்டணத்தை அதிகரிக்க தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
நான்கு நாடுகளின் தபால் பொருட்கள் மீதான கட்டுப்பாடு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க, நெதர்லாந்து, இஸ்ரேல் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு தபால் பொருட்களை ஏற்றுக்கொள்வது நிறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கைக்கான விமான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.