அஸ்வெசும பயனாளிகளுக்கு நலன்புரி நன்மைகள் சபை முக்கிய அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் தகுதிபெற்ற பயனாளிகளுக்கான 2026 செப்டம்பர் மாதத்திற்குரிய முதியோர் கொடுப்பனவு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் இரண்டு கட்டங்களின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட 695,818 முதியோருக்கு வழங்கப்படவுள்ள இந்தக் கொடுப்பனவிற்காக மொத்தம் 3,479.07 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 616,755 பயனாளிகளுக்காக 3,083.755 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டத்தின் கீழ் 79,063 பயனாளிகளுக்காக 395.315 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தகுதிபெற்ற பயனாளிகள் ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் தங்களது அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாக இந்தக் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.