இறக்குமதி வரிக் கொள்கைகள், வர்த்தக உடன்படிக்கைகள் குறித்து நாடாளுமன்றக் குழுவில் ஆராய்வு
இலங்கையின் இறக்குமதி வரிக் கொள்கைகள் மற்றும் இருதரப்பு, பல்தரப்பு வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க தலைமையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது, வணிகத் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் சோமசேன மகாதிவுல்வேவ, இலங்கையின் வர்த்தக உடன்படிக்கைகளின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அவற்றைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து குழுவுக்கு விரிவான விளக்கமளித்தார்.

குறிப்பாக, தற்போது கலந்துரையாடல் மட்டத்தில் உள்ள வர்த்தக உடன்படிக்கைகள், அவற்றின் சாத்தியக்கூறுகள் மற்றும் எதிர்காலத்தில் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
கலந்துரையாடல் நிலையில் உள்ள வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்பில் சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொண்டு, அவற்றைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு குழு அதிகாரிகளுக்கு வலியுறுத்தியது.