வெளிநாட்டு கையிருப்பை வலுப்படுத்த அடுத்த கட்ட IMF நிதி எதிர்பார்ப்பு
விரிவாக்கப்பட்ட நிதிவசதி செயற்திட்டம் தொடர்பான 5ஆம் மற்றும் 6ஆம் கட்ட மீளாய்வுகள் குறித்து எட்டப்பட்ட உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாட்டுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இயக்குநர் சபை இன்று (27) கூடுகிறது.
அநுராதபுரம் சிறுமி துஷ்பிரயோக விவகாரம் ; சட்டத்தை மீறும் பிக்குகளுக்கும் தப்ப முடியாது ; நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டப் பிரதானி எவான் பபஜோர்ஜியோ (Evan Papageorgiou), கடந்த சில ஆண்டுகளில் இலங்கை பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதிலும், வெளிநாட்டு கையிருப்பு மட்டத்தை வலுப்படுத்துவதிலும் மற்றும் சந்தை நம்பகத்தன்மையை மீளக் கட்டியெழுப்புவதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அரசாங்க அதிகாரிகள் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகள் காரணமாக பொதுமக்கள், முதலீட்டாளர்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும், அதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக ஸ்திரமடைந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும், அண்மையில் உருவாகியுள்ள உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் சவால்கள் இலங்கையின் பொருளாதாரத்திற்கு புதிய அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின் கொள்கைசார் கட்டமைப்பு தற்போது வலுவான மற்றும் முன்னேற்றகரமான நிலையில் இருப்பதாகவும் இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி பாராட்டு வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர் சபையின் ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில், அடுத்த கட்ட நிதி விடுவிப்பின் மூலம் நாட்டின் வெளிநாட்டு கையிருப்பை மேலும் வலுப்படுத்த முடியும் என இலங்கை மத்திய வங்கி எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது.