யாழில் சட்டவிரோத மணல் ஏற்றியவர்கள் தலை தெறிக்க ஓட்டம்; துரத்திப்பிடித்த பொலிஸார்
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களின் நான்கு வாகனங்கள் மணல் அகழ்வுக்கு பயன்படுத்திய சவல் உள்ளிட்டவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
தனங்கிளப்பு பகுதியில் கும்பல் ஒன்று சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர்.

இருவரை மடக்கி பிடித்த பொலிஸார்
பொலிசாரை கண்டதும் , மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் தப்பியோடி நிலையில் அவர்களில் இருவரை பொலிஸார் மடக்கி பிடித்தனர்.
அத்துடன் மணல் ஏற்றிய நிலையில் காணப்பட்ட இரண்டு டிப்பர் வாகனங்கள் , இரண்டு உழவு இயந்திரங்கள் , மற்றும் மண் அகழ்வுக்கு பயன்படுத்திய சவல் உள்ளிட்டவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் தப்பியோடிய ஏனையவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துளள்னர்.