மறைந்த அன்பு மகள் பவதாரிணி குறித்து இளையராஜா வெளியிட்ட உருக்கமான பதிவு!
தென்னிந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி நேற்றைய தினம் உடல்நிலை குறைவால் இலங்கையில் காலமானார்.
இவரின் உயிரிழப்பு தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
பவதாரிணி இளையராஜாவின் இசையில் ராசையா படத்தில் இடம் பெற்று இருக்கும் மஸ்தானா... மஸ்தானா... பாடல் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானவர்.
இந்த நிலையில் 47 வயதாகும் பவதாரிணி கடந்த 5 மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த பவதாரிணி ஜனவரி 25ம் திகதி மாலை 5.30 மணி அளவில் காலமானார்.
இவ்வாறான நிலையில், தனது மகளுடன் இருக்கும் இளம் வயது புகைப்படத்தை இளையராஜா தனது 'எக்ஸ்' தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பவதாரிணி சிறுமியாக இருந்தபோது எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்துடன் "அன்பு மகளே" என்ற உருக்கமான வார்த்தைகளை பதிவிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து ரசிகர்கள் இளையராஜாவுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
அன்பு மகளே... pic.twitter.com/GgtnKGyvQ1
— Ilaiyaraaja (@ilaiyaraaja) January 26, 2024