சிங்களப்பெண்ணிற்கே இந்த நிலையெனில்.... தமிழ் பெண்களின் நிலை எப்படி இருந்திருக்கும்?
மஹிந்த குண்டர்களினால் அமைதியாக அறவழிப்போராட்டம் நடத்தியவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் பெண்ணொருவரை தாக்கும் காணொளி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தன்னித்தையே இவ்வளவு கொடூரமாக தாக்கத்தூண்டிய கொலைகாரர்களின் கைகளில் சிக்கிய தமிழ் பெண்ண்களின் நிலை என்னவாயிருக்கும் என்பதை நினைத்துப்பார்க்கையில் மனம் வெதும்புகின்றது.
தாயை ஒத்த வயதான பெண் மீது இவ்வாறு கொடூரமானமுறையில் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து சமூகவலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளது. பெண் என்றும் பாராது இவ்வளவு கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவங்கள் சினிமாவில் மட்டுமே பார்த்திருப்போம்.
ஆனால் இன்றைய அரசாங்கத்தின் அராஜக அடக்குமுறைகள் இக்காணொளி வாயிலாக அறியக்கூடியதாகவுள்ளது. இப்படியான குண்டர்களிடம் தமிழ் பெண்கள் சிக்கக்கூடாது என்பதற்காகதான் தமிழர்களின் போராட்டம் இடம்பெற்றது.
தமிழின அழிப்பு போராட்டத்தில் இந்த சிங்கள பெண்ணை கொடுமைப்படுத்தியபோல நூறு மடங்கு அதிகமாகவே சிங்கள் காடையர்கள் நடந்துகொண்டிப்பார்கள் என்பதில் எந்தவொரு ஐயமும் இல்லை. உலகம் அறியாது பல கொடும் செயல்களை செய்துவந்த ராஜபக்க்ஷசர்களுக்கு இறைவன் எழுதி வைத்துள்ள தீர்ப்பு என்ன வென்பது விரைவில் தெரிந்துவிடும்.
மண்ணில் விதைகளாய் விதைக்கப்பட்டுள்ள எம் இனத்தின் படுகொலைகளுக்கான பாவங்களைதான் இன்று இந்த அரசாங்கம் அனுபவித்துக்கொண்டிருக்கின்றது.
அதேவேளை போராட்டகார்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அடுத்து ஆட்சியாளர்கள் மீது கடும் கோபம் கொண்ட மக்கள் அரசியல் பிரமுகர்களின் சொத்துக்களுக்கு தீயிட்டு வருகின்றனர். இதனையடுத்து முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச குடுபத்துடன் திருகோண்மலை கடற்படை முகாமில் தஞ்சமைந்துள்ளார்.
அரசன் அன்றே கொல்வான்...தெய்வம் நின்று கொல்லும் எனும் தமிழர் முதுமொழி பொய்க்கவில்லை....