மே 9 முதல் நான் பிரபலமானேன்;பெருமிதம் கொள்ளும் மஹிந்த கஹந்தகம
இலங்கையில் கடந்தாண்டு மே மாதம் 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டவர்களில் ஒருவரான முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம, உயிர் பிழைப்பதற்காகவும் அனுதாபத்திற்காகவும் அடிக்கப்படும் போது தான் ஒரு செயலைச் செய்ததாக தெரிவித்தார்.
அரசியல் தலைவராக்கிய அரகலய
அதன்படி கடந்தாண்டு மே மாதம் 9ஆம் திகதி,அமைதி வழியில் போராடியவர்கள் தாக்கப்பட்டதை நினைவுகூரும் போது தனது உணர்வுகளை வெளிப்படுத்திய அவர், தன்னை அரசியல் தலைவராக்கிய அரகலயவிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“இப்போது, அரகலயவின் பின்னர் நடந்தவற்றின் காரணமாக நான் மிகவும் பிரபலமாகிவிட்டதால் எனக்கு எந்த விளம்பரமும் தேவையில்லை”.
அரகலய தொடர்பில் கருத்து தெரிவித்த கஹந்தகம, இது ஒரு சதி எனவும் செயற்பாட்டாளர்கள் அதனை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
தனக்கு பேரே ஏரியில் குளிப்பது மிகவும் பழகிவிட்டதாகவும், அது தனக்கு புதிதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.