நாய்களால் தொல்லை; மனைவியிடம் விவாகரத்து கோரிய கணவர்
இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவர் தெருநாய்களால் மனைவியிடம் விவாகரத்து கோரிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணமானதில் இருந்து அவர் மனைவியின் செல்லப்பிராணி பாசத்தால் பல கொடுமைகளை அனுபவித்து வருவதாக கூறி வந்துள்ளார். இது தொடர்பில் கணவர் கூறுகையில்,

தெருநாய்களுக்கு விதவிதமான உணவு
'திருமணம் முடிந்த கொஞ்சநாளில் மனைவி ஒரு தெரு நாயை தனது வீட்டுக்கு கொண்டு வந்தார். அவர் வசித்து வந்த அடுக்கு மாடிக்குடியிருப்பில் இதற்கு எதிர்ப்பு கிளம்பிய போதும் அவர் அதை கண்டு கொள்ளவில்லை.
தொடர்ந்து அவர் தெருவில் சுற்றி திரியும் நாய்களை வீட்டுக்கு எடுத்து வந்தார். தன் கணவருக்கு சமைக்கிறாரோ இல்லையோ. அந்த தெருநாய்களுக்கு விதவிதமான உணவுகளை சமைத்து போட்டார்.

அத்தோடு அந்த நாய்களை கண்ணும் கருத்துமாக பராமரித்து வந்தார். இரவு நேரம் என் அருகில் தூங்கியதைவிட அந்த நாய்களுடன்தான் அதிக நேரம் தூங்கினார்' எனத் தெரிவித்துள்ளார்.
மனைவியின் இந்த செயல் கணவரை எரிச்சல் படுத்தியது. பக்கத்தில் வசித்து வந்த பொதுமக்களும் அப்பெண் மீது பொலிஸில் முறைப்பாடு அளித்தனர்.
ஆனால் விலங்குகள் நலவாரியத்தில் உறுப்பினராக சேர்ந்த அவர் பொதுமக்கள் மீது குற்றம் சாட்டினார்.
இதனால் அந்த பெண்ணின் மனைவியால் தான் அவமானப்பட்டதாக உணர்ந்த அவர் கடந்த 2007 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தப்பி ஓடினார். இருந்த போதிலும் கணவரை அவர் தொடர்ந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார்.
இனியும் குடும்பம் நடத்த முடியாது
மேலும் தெருநாய்களை திருமணம் செய்து கொண்டது போல புகைப்படத்தை காட்டி தன்னை வெறுப்பேற்றுவதாகவும், இதன் காரணமாக மன அழுத்தத்தால் தனது ஆண்மை இழந்து விட்டதாகவும் அவர் புலம்ப ஆரம்பித்தார்.
இதனால் விரக்தியின் உச்சத்துக்கு சென்ற அவர் தெரு நாய்களுடன் வாழ்க்கை நடத்திய மனைவியுடன் இனியும் குடும்பம் நடத்த முடியாது என கருதி தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் எனக்கோரி அகமதாபாத் குடும்ப நல நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துளள்ளார்.

மனைவிக்கு 15 இலட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கொடுப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவரது மனைவியோ கணவரின் குடும்பத்தினர் வெளிநாட்டில் ரிசார்ட் நடத்தி வருவதால் தனக்கு 2 கோடி ரூபாய் வேண்டும் என கேட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு அடுத்த மாதம் முதலாம் திகதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.