இலங்கையில் மனைவியை கொல்ல முயன்ற ஐரோப்பிய கணவன்; பொலிஸில் சரணடைந்த பெண்
இலங்கையில் மனைவியை காரால் ஏற்றி கொல்ல முயன்றதாக சந்தேகத்தின் பேரில், இலங்கை பெண்ணின் கணவனான இத்தாலிய நாட்டவர் மற்றும் அவரது வாகன ஓட்டுநரும் ர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை திக்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் இலங்கைப் பெண் வழங்கிய முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தம்பதியரிடையே கருத்து மோதல்
சம்பவம் தொடர்பிலான விசாரணையின் போது ஆய்வு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளில், மனைவி மீது காரை ஏற்றி கணவன் கொல்ல முயன்றது தெரியவந்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் காரையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். குறித்த தம்பதி திக்வெல்ல பகுதியில் ஒரு ஹோட்டலை நடத்தி வருகின்றனர்.
குறித்த ஹோட்டல் இலங்கை மனைவிக்குச் சொந்தமானது ஆகும் . இத்தாலிய நாட்டவர் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட நிலையில் அந்த பெண்ணைச் சந்தித்த அறிமுகமாகி, இருவரும் காதல் வயப்பட்ட பின்னர் திருமணம் செய்து கொண்டனர்.
எனினும் தம்பதியினர் இடையே தொடர்ந்து வாக்குவாதங்கள் இடம்பெற்று வந்ததாக கூறப்படுகின்றது. இதனையடுத்து சந்தேக நபர்கள் காரை ஓட்டி மனைவியை கொலை செய்ய முயன்றதாக மிரட்டல் விடுத்ததுடன், கொலை செய்ய முயன்றதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் கைது செய்யப்பட்ட இத்தாலிய நாட்டவரும் அவரது ஓட்டுநரும் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.