இலங்கையர்களை இலக்குவைத்து ஆட்கடத்தல்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கையர்களை இலக்குவைத்து, , ஆட்கடத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய ஆட்கடத்தல் தடுப்பு பணிக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த வலையமைப்புகள், 50,000க்கும் மேற்பட்ட நபர்களை மோசடி நடவடிக்கைக்குள் உள்ளீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகப் புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன.
5 மோசடி மையங்கள்
ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் இலங்கையர்களே முதன்மையாக இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடி வேலை வாய்ப்புகள் மற்றும் தவறான நிகழ்நிலை விளம்பரங்களைப் பயன்படுத்தி தொழில் தேடுபவர்களை ஈர்க்கும் செயற்பாடுகளில் புதிதாக 5 மோசடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த மோசடி மையங்களால் இலங்கையர்கள் பலர் அண்மையில் கடத்தப்பட்டுள்ளதாகத் தேசிய ஆட்கடத்தல் தடுப்பு பணிக்குழு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இணையக்குற்ற முகாம்களுக்கு11 இலங்கையர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களில் குறித்த 11 இலங்கையர்களும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.