பற் தூரிகையை தேர்ந்தெடுக்கும் முறை
முன்னோர்கள் பல்துலக்க வேப்பம் குச்சிகள், ஆல மரக்குச்சிகள் ஆகியவற்றை அதிகமாகப் பயன்படுத்தினர்.
ஆனால் மாறிவரும் கால நிலையில் இப்போது பிரெஷ்கள் அந்த இடத்தை முழுமையாக பயன்படுத்துகின்றனர்.
இதன் மூலம் பற்கள் மற்றும் ஈறுகளை முழுமையாக சுத்தம் செய்ய இயலுகிறது.
பெரும்பாலான பல் மருத்துவர்கள் காலையில் எழுந்த பிறகும் இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன்பும் துலக்க வேண்டும் என பரிந்துரைக்கின்றனர்.
எனவே பிரெஷ்ஷை தேர்ந்தெடுக்கும்போது சில விடயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை
பல் துலக்க பிரஷ்ஷை வாங்கும் போது பெரும்பாலும் நாம் கவனக்குறைவாக, கிடைத்ததை வாங்கும் மனநிலையில் இருக்கிறோம். அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
பொதுவாக, பிரெஷ் முட்கள் சிறிது கடினமாக இருந்தால், பற்களின் தூய்மைக்கு சிறந்தது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் இந்த அனுமானம் முற்றிலும் தவறானது.
கடினமான தன்மை கொண்ட பிரெஷ்கள் ஈறுகளில் இரத்தப்போக்கு மற்றும் அதிக வலியை ஏற்படுத்தும் என்பதால் மென்மையான பிரெஷ்களையே தேர்வு செய்ய வேண்டும்.
தினமும் பற்களை சுத்தம் செய்ய வழுக்கும் வகையில் உள்ள பிரெஷ்களை பயன்படுத்தக்கூடாது.