எவ்வாறு என்னை ஒப்பிடலாம்; இலங்கைப் பாடகி ஜொஹானி கண்டனம்
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் தன்னை ஒப்பிட்ட ஊடகங்களுக்கு இலங்கைப் பாடகி ஜொஹானி டி சில்வா கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஏர்.ஆர்.ரஹ்மான் இசையில் கடவுள் என்றும், அத்தகைய ஜாம்பவானுடன் என்னை எப்படி ஒப்பிட முடியும்? எனவும் கேள்வி எழுப்பிய ஜொஹானி, ரஹ்மானுடன் என்னை ஒப்பிட்டுப் பார்க்க ஊடகங்கள் என்னை தெரிவு செய்ததில் நான் ஏமாற்றம் அடைகிறேன் என்றும் கூறியுள்ளார்.
நாள் ரஹ்மானுடன் பணிபுரிய விரும்புவதாக தெரிவித்த ஜொஹானி, , அவர் எனக்கு முன்மாதிரி என ஜொஹானி கூறியுள்ளார்.
ஜொஹானியின் யூடியூப் சந்தாதாரர்கள் 2.95 மில்லியன் எனவும், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு 2.93 மில்லியன் சந்தாதாரர்கள் எனவும் சமூக வலைத்தளங்களில் இருவரையும் ஒப்பிட்டு தகவல்கள் வைரலானமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
ஆஸ்கர் நாயகனை பின்னுக்கு தள்ளி இலங்கை இளம் பாடகி படைத்த சாதனை!