கடும் காற்றினால் வீடுகள் தூக்கி வீசப்பட்ட வீடுகள்!
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டானில் வீசிய கடும் காற்றினால் வீடுகள் சில சேதமடைந்துள்ளன. ஒட்டுசுட்டான் பிரதேசத்துக்கு உட்பட்ட முத்தையன் கட்டு கிராம அலுவலகர் பிரிவில் ஜீவநகர் மாதிரிகிராமத்தில் இந்த அனர்த்தம் நேற்று (20) மாலை இடம்பெற்றுள்ளது.
கடும் காற்றும் மழையும் பெய்துள்ள நிலையில் வீசிய கடும் காற்றினால் வீடு ஒன்றின் கூரையில் பொருத்தப்பட்டிருந்த 7 சீற்றுகள் தூக்கிவீசப்பட்டுள்ளதுடன் வீடு சேதமடைந்துள்ளது.
தூக்கி வீசப்பட்ட ஓடுகள் சீற்கள்
மூன்று அங்கத்தவர்களை கொண்ட குடும்பத்திற்கு அரசாங்கம் வழங்கிய வீட்டுத்திட்டத்திற்கான நிதி முழுமையாக கிடைக்காத நிலையில் நிறுவனம் ஒன்றின் நிதி உதவியில் வீடு கட்டிக்கொடுக்கப்பட்டு வாழ்ந்து வந்த நிலையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது .
இதேவேளை கிராமத்தில் உள்ள மேலும் இருவரின் வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. வீட்டின் ஒடுகள் தூக்கிவீசப்பட்டுள்ளதுடன் தற்காலிக கொட்டிலில் வசித்துவரும் குடும்பம் ஒன்றின் வீடும் காற்றினால் சேதமடைந்துள்ளது.
அதேவேளை நாட்டில் கடந்த நாட்களாக கடும் வெப்பம் நிலவிய நிலையில் நேற்று மாலை கடும் காற்றும் மழையும் பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.