கோடீஸ்வர வர்த்தகர் உயிரிழப்புக்கு ஓரினச் சேர்க்கை காரணம்; பொலிஸார் அதிர்ச்சித்தகவல்!
தலங்கம பெலவத்தை பகுதியில் உயிரிழந்த கோடீஸ்வர வர்த்தகர், மரணத்திற்கு ஓரினச் சேர்க்கையே காரணம் என பொலிஸார் அதிர்ச்சித்தகவலொன்றினை வெளியிட்டுள்ளனர்.
வெல்லம்பிட்டிய, கிட்டம்பஹு பகுதியைச் சேர்ந்த ரொஷான் வன்னிநாயக்க கொட்டிகாவத்தை, ராஜகிரிய, பெலவத்தை முதலான பல இடங்களில் உள்ள ஆடை விற்பனை நிலையங்களின் உரிமையாளர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஓரினச்சேர்க்கையாளர்களின் நண்பர்கள்
வர்த்தகர் கொலை தொடர்பில் கைதான சந்தேக நபரும் வர்த்தகரும் ஓரினச்சேர்க்கையாளர்களின் நண்பர்கள் சங்கம் ஒன்றின் அங்கத்தவர்கள் எனவும், இந்த நண்பர் சங்கத்தின் ஊடாக பணத்திற்காக பல்வேறு நபர்களுடன் நெருங்கிய தொடர்புகளை சந்தேக நபர் பேணி வருவதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதோடு சந்தேக நபர் தொழில் இல்லாதவர் என்றும், இந்த குழுவின் மூலம் பல்வேறு நபர்களுடன் சென்று பணம் சம்பாதிப்பதாகவும், திருமணத்திற்கு பிறகு அந்த பழக்கத்தை விட்டுவிட்டதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திருமணமாகி வேலை இல்லாத காரணத்தால் குடும்பத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. எனினும், மீண்டும் பழையபடி பணம் சம்பாதிப்பதற்காக மேற்படி தொழிலதிபருடன் தொடர்பினை ஏற்படுத்தியுள்ளமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
இருவருக்கும் இடையிலான முதலாவது சந்திப்பு கடந்த 30ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும் உறவுகொள்வதற்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிற்குச் வருமாறு சந்தேகநபர் பரிந்துரைத்த போதிலும், வர்த்தகர் அதனை விரும்பாததால் தனது பெலவத்தையை வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நெருங்கிய தொடர்பு
இருவருக்குமிடையில் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டதன் பின்னர், ஓரினச் சேர்க்கையில் இவ்விருவரும் ஈடுபட்டுள்ளனர். அதற்காக ஒரு இலட்சம் ரூபாவை சந்தேகநபர் தொழிலதிபரிடம் கோரியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் தொழிலதிபர் பணத்தை தர மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் , தொழிலதிபரை கீழே தள்ளிவிட்ட சந்தேக நபர், அவரது தலையில் தடியால் தாக்கியதில் தொழிலதிபரின் கழுத்து உடைந்து அவர் இறந்துவிட்டதாக பயந்து சடலத்தை நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டு ஓடியதாகவும் சந்தேக நபர் வாக்குமூலமளித்துளதாக கூறப்படுகின்றது.
உயிரிழந்த திருமணமாகாத கோடீஸ்வர வர்த்தகர், பெலவத்தை பிரதேசத்தில் மூன்று மாடி வீடு ஒன்றை வாங்கி, புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த அவரது சடலம், பொலிஸாரால் மீட்கப்பட்டதுடன் , கந்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவல்களின் பிரகாரம் இளம் தம்பட்க்ஹி கது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.