தீபாவளிக்கு ஸ்பெஷல் விடுமுறை; மகிழ்ச்சியில் மக்கள்!
தமிழ்நாட்டில் தீபாவளி திருநாளுக்கு மறுநாள் (நவ. 9) விடுமுறையை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தீபாவளி திருநாள் நவ. 8 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், சொந்த ஊர் செல்வோர் வசதிக்காக, நவ. 9 ஆம் தேதி திங்கள்கிழமையையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெஷல் விடுமுறை
தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் நவ. 28 ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தீபாவளி திருநாள் வரும் நவ. 8-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமை அன்று வருவதால், பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊர் சென்று வர ஏதுவாக நவ. 9 ஆம் தேதியும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், தீபாவளி திருநாளுக்கு மறுநாள் (நவ. 9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.